சனி, 24 ஜூலை, 2021

சார்பட்டா திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள்மட்டுமே விவாதத்திற்கு உள்பட்டதாகவும்மக்கள் மனதை எளிதில்  கவரக்கூடியதாகவும்  இருக்கின்றனஅப்படிமக்கள் மனதை எளிதில் கவர்ந்த  படங்களெல்லாம் பெரும்பாலும் எளிய மக்களின் கலாச்சாரம்பண்பாடுவாழ்வியலில் எனஅ அத்தனையையும்  நேர்மையாக பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது. அப்படி மக்கள் மனதை வென்றப் படங்களில் சார்பட்டாவும் ஒன்று படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

 ஒரு முன்னனி ஹிரோவுக்காக கதையை வடிவமைப்பதை விட , ஒரு கதாப்பாத்திரத்தை  அதன் இயல்பிலேயே பேசவிட்டு,  அதற்கு ஏற்றால் போல் நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைதத்தில் படத்தின் இயக்குனர்       மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார்.

கதையின் தொடக்கம் 1975 பிற்பகுதியில் டாக்டர் திரு. கலைஞர் கருணாநிதியின் ஆட்சி  காலத்தில் மிசா சட்டம் கொண்டுவந்து ஆட்சியைக் கலைத்து அடக்குமுறைக்கு உற்பட்ட போது நடக்கும் கதை என்பதால்அந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் பேச்சு,உடை,நடைஉருவ அமைப்பு என படத்தில் அத்தனையும் கன கட்சிதமாக பொருந்தியிருந்தது.  
தமிழ் சினிமாவில் நேரடி அரசியல் பேசுவதில் திரு. T. ராஜேந்திரன் படங்களுக்குப் பிறகு பாரஞ்சித் அவர்கள் தான் நேரடியாக அரசியல் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். திரு. கலைஞர்எம்.ஜி ஆர்என இரு கட்சித்தலைவர்களின் கட்சிக் கொடிஅவர்களின்  புகைப் படங்கள்திரு. முஸ்டாலின் கைது என நேரடி அரசியல் பேசியிருப்பது பாராட்டக்கூடியதாக இருந்தாலும்ஒரு சில இடங்களில் எம்.ஜி.ஆர் கட்சியில் கடத்தல் ,   கள்ளச்சாராயம்ரவுடிசம் அதிகம்  இருப்பதாக கட்டமைத்திருப்பது பாரபட்சமாக இருப்பதாக எனக்குத்  தோன்றியது.
 
திரைக்கதை சென்னைத் துறைமுகத்தை சுற்றியிருக்கும் சராசரி மக்களின் கதை  என்பதால் அந்தக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் பொழுது போக்கிற்காக விளையாடிய  குத்துச்சண்டையை அப்பகுதியில் வசித்த  மக்களில் ஒரு சிலர்  கற்றுக் கொண்டு  குத்துச்சண்டை போட்டி நடத்துகிறார்கள்அப்போட்டியில் சார்பட்டா பரம்பரைஇடியப்ப  பரம்பரை என இரு குழுக்களாகப் பிரிந்து போட்டி பொறாமைஅதிகாரத் திமிருஅடக்குமுறை என கதைக்களம் நகர்கிறது அவர்களுக்குள் நடக்கும் போட்டியில் சார்பட்டா பரம்பரையே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறதுபடத்தின் ஆரம்பத்திலேயே இரு குழுக்களுக்கும் இடையே நடைபெறும் போட்டிதான் கதை என்று தெரிந்திருந்தாலும்படம் முழுவதும் பார்வையாளர்களை சோர்வடையவிடாமல்  திரைக்கதையை வடிவமைத்திருப்பது பாராட்டத்தக்கது.                                                                          
திரைக்கதையில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் வந்திருந்தாலும் கபிலன் ( ஆர்யா),  கபிலன் மனைவி மாரியம்மாடாடி ( ஜான் விஜய்), வாத்தியார் ரங்கன் ( பசுபதி )  கபிலன் அம்மா பாத்திரம்ரங்கன் மகன்   கலையரசன்ரேஸ்இந்த கதாபாத்திரங்கள் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.

இரண்டு பரம்பரை குத்துச்சண்டை போடுவதும் , அதற்கு நடுவில் அரசியல் வந்தால் என்னவெல்லாம் நிகழும் என்பதையும் நன்றாக கணித்து ஆராய்ந்து , தமிழ்நாட்டில்  எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற பலநிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்க செய்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்தமிழக அரசியலில் திமுக அதிமுகபோன்ற கட்சிகளின் அன்றைய நிலைப்பாடு ,தலைவர்கள் மேற்கொண்ட முடிவுகள் , பாமர மக்கள் சந்தித்தவிளைவுகள் இதற்கு மத்தியில் குத்துச்சண்டை விளையாட்டு அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்று படம்முழுவதுமாக இருக்கிறதுவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு குத்து சண்டையை உயிர் மூச்சாக நினைத்துவாழ்ந்தவர்களின் எண்ணங்களை மிகவும் ரசனையுடன்அரசியல் கலந்து சொல்வதே சார்பட்டாதிரைப்படத்தின் கதையாகும்

ஆடுகளம் திரைப்படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோஅதே தாக்கத்தை இப்படமும் உணர்த்துவதாககருதுகிறேன்தென் தமிழகத்தில் எண்பது  தொண்ணூறுகளில் பல கிராமங்களிலும் கபடிப் போட்டிமஞ்சுவிரட்டுசேவல் சண்டை என எல்லாப் போட்டிகளும் வெற்றித் தோல்விகளைக் கடந்துஅதிகார ஆணவம்பரம்பரைப் பகைசாதிய அடக்குமுறை பழிவாங்கும் செயலாக மாற்றிவிடும்அது போன்ற கதைக் கருவைகொஞ்சம் அரசியல் கலந்து கொடுத்திருக்கிறார் என உணர்கிறேன்.

"இப்படத்தில் கவனிக்கப்பட வேண்டியவை"

"விளையாட்டில் வெற்றி, தோல்வி தானே இருக்கிறது பரம்பரை எங்கிருந்து வந்தது"திறமை உள்ளவன்செயிக்கிறான்இன்று தோற்றவன் நாலை செயிச்சிட்டுப் போறான்பசுபதி கதாபாத்திரம் மேலும் சில இடங்களில் திமுகவை உயர்த்தி பேசுவது போல காட்சி. "நான் கழகத்துக்காரன் அச்சப்பட மாட்டேன்.." என்பது அதில் ஒரு முக்கியமான வசனம்அதேநேரம்எம்.ஜி.ஆர், திரு. இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்ததைப்போலஒரு சுவர்  விளம்பரம் படத்தில் காட்டப்பட்டுள்ளதுமேலும்மிசா சட்டத்தின் மூலமாக திருகருணாநிதி மகன் திரு. ஸ்டாலினை கூட கைது செய்து விட்டார்கள் என்பது போன்ற வசனம் இருக்கிறது.  பசுபதி சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகிவீட்டிற்கு வந்து மனைவி சாதம் போடும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல்ஆர்யா குடித்துவிட்டு சுயநினைவிழந்து கிடைக்கும்போது மனைவியின் தவிப்புதிருந்தி   நடக்கும்போது,  அவர்களுக்குள் நடக்கும் ஊடல் என மொத்தத்தில் படம் முழுக்கவே காதல்விளையாட்டுஅரசியல் என சரிசமமாக கலந்து கொடுத்திருக்கிறார்மீண்டும் ஒருமுறை  இயக்குநர்கள்மற்றும் நடிகர்களுக்கு எனது வாழ்த்துகள்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...