புதன், 29 ஏப்ரல், 2020

பேட் மேன் (PAD MAN) ஹிந்தி படம் திரைவிமர்சனம்



கொரனாவின் கோரப்பிடியிலிருந்து எப்படி கடப்பேன் இப்பொழுதை என்ற கேள்விகள் எனக்குள் முளைக்கையில், பொழுதுபோக்க திரைப்படம் பார்க்கத் தொடங்கினேன்....!
இன்று நான் பார்த்து ரசித்த ஹிந்தி திரைப்படம் பேட் மேன் (PAD MAN) ,

இது ஒரு வரலாற்று திரைப்படம். கோயம்புத்தூரிலிருந்து பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறிய திரு. அருணாச்சலம் முருகானந்தத்தின் உண்மைக் கதையின் தழுவல்.
அவர் கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கும், பொருளாதார ரீதியாகத் திறமையான இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

இந்தியாவில் மாதவிடாய் ஆரோக்கியம், மற்றும் சுகாதாரத்தை புரட்சிகரமாக்குவதற்கான அருணாச்சலத்தின் கடினமான உழைப்பையும், அவர் பெண்கள் மீதும், இச்சமூகத்தின் மீதும் எவ்வாறு அக்கறையுள்ள மனிதராக திகழ்ந்தார் என்ற உண்மைக் கதையை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திரு. பால்கி.
ஆக்ஷ்யக்குமார் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், எப்போதும் இச்சமுகத்தின் மீது அக்கறையுள்ள மனிதர். ஏற்கனவே கழிப்பறை விழிப்புணர்வுள்ள கதையில் நடித்தார். இம்முறை பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தொடர்பான கதையில் நடித்து மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர்கள்: ஆக்ஷ்யக்குமார், சோணம் கபூர், ராதிகா ஆப்தே, மற்றும் பாலர்.
திரைக்கதை
மெக்கானிக் லட்சுமி காந்த் சவுகான் (ஆக்ஷ்யக்குமார்) மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் கிராமத்தில் உள்ள மற்ற மனிதர்களைப் போல் இல்லாமல், சமூகத்தின்மீது அக்கறை கொண்ட முற்போக்கானவர், அவர் மனைவி (ராதிகா ஆப்தே ) மாதவிடாய் சமயத்தில் அழுக்குத் துணியைப் பயன்படுத்துகிறாள் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைகிறான்...! பின் ஒரு மருந்துக்கடைக்குப் போய் சானிட்டரி பேட் கேட்கிறார், அதை விற்கும் கடைகாரர் முதல் அங்கு சுற்றி நிற்கும் பெண்கள் , ஆண்கள் எல்லோரும் லக்ஷ்மியை ஏளனமாகப் பார்க்கிறார்கள்...!
சானிட்டரி பேடை வாங்கிக் கொண்டுபோய் தன் மனைவியிடம் கொடுத்து நீ இனிமேல் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் சுகாதாரமற்ற துணியைப் பயன்படுத்தவேண்டாம் என்று அன்புக்கட்டளையிட....அவளோ அதன் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்...!
அவள் மட்டுமில்லை அவன் சகோதரிகள், மற்றும் அவனைச் சுற்றியுள்ள பெண்களும் அழுக்குத் துணிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிகிறார்.
பெண்களில் மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான செயல், இது நமது சமுதாயத்தில் மிகப் பெரிய அளவில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பேசும்போது மக்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. இந்தியாவில் மாதவிடாய் காலத்தில், எண்பது சதவீதப் பெண்கள் அழுக்கு துணிகளையும், சாம்பல், இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். யாரும் அவர்களைத் தொடுவதில்லை.அவர்கள் வீடு அல்லது சமையலறைக்கு வெளியே உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர் ஒரு குற்றம் செய்ததைப் போல எல்லோரும் அவரைப் பார்க்கிறார்கள். வறுமை மற்றும் கல்வியறிவின்மையே இதற்கு மூல காரணம்.
சிறுவர்கள் ஐந்து நாள் சோதனை ஆட்டம் என்று கிண்டல் செய்வதை அறிந்த லக்ஷ்மி மிகுந்த மனவேதனை அடைகிறார்.....!
இரண்டு ரூபாய் மதிப்புள்ள சானிட்டரி பேடை, தனியார் நிறுவனர்கள் ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்பதால், கிராமப்புற பெண்கள், ஏழை எளிய குடும்பத்துப் பெண்கள் ஆபத்தான சுதாகரம்ற துணியைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்ததும், தானே குறைந்த விலையில் சானிட்டரி பேட் தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்....!
இதைப்பற்றி வெளியில் பேசுவதற்குத் தடைசெய்யப்பட்ட சமூகத்தில் தனியொருவனாகவும், தான் தயாரித்த பேடை சோதனை செய்து பார்க்க ஆள் இல்லாமல் தடுமாறுவதும்...! இவரின் செயல்பாடுகளை கண்ட குடும்பம், மற்றும் சுற்று மாவட்டத்தினர் எல்லோரும் இவரை புறக்கணித்த போதும் எப்படி வெற்றிபெற்றார் என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
இயக்குநராக பாலகியின் பணி அருமை. மக்கள் பேச விரும்பாத ஒரு பொருளை, மக்கள் விரும்பும் ஒரு திரைப்படமாக்குவது ஒரு ஆபத்தான பணி, ஆனால் இயக்குநர் பால்கி அதைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பார்வையாளர்களை மகிழ்விக்க, அவர் பொழுதுபோக்கு காட்சிகளை உருவாக்கி, தனது கருத்தை பார்வையாளர்களுக்கு முன்னால் வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.
நடிப்பைப் பொறுத்தவரை, இது அக்‌ஷய் குமாரின் வாழ்க்கையின் சிறந்த படமாக கருதலாம். அவர் லட்சுமிகாந்தை ஊக்கப்படுத்தியுள்ளார், படத்தின் ஆரம்பத்தில் அவர் அக்‌ஷய் குமார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். படம் முழுவதும், கதாபாத்திரம் உறுதியாக உள்ளது. தனக்குள் இருக்கும் நல்ல மனிதனை அவர் நடிப்பின் மூலம் பிரதிபலித்திருக்கிறார். படத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையை உரையாற்றும் காட்சியில் அவரது நடிப்பு வியக்கவைத்துள்ளது.

கேம் ஓவர் ( GAME OVER ) மலையாள திரைப்பட விமர்சனம்



நான் பார்த்து ரசித்த தமிழ் சினிமா கேம் ஓவர்
( GAME OVER )
திரைக்கதை இயக்கம்: அஷ்வின் சரவணன்.
நடிகர்கள் : டாப்ஸி, வினோதினி, அனிஷ் குருவில்லா, ரம்யா
நான் பார்த்த பேய் படங்களில் இப்படம் கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையாக இருந்தது.
பொதுவாக பெண்கள் தங்களுக்கு நடந்த, கொடுமைகளை நினைத்து துவண்டு போகாமல், வாழ்வோ! சாவோ! எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாகப் போராடவேண்டும் என்ற தன்னம்பிக்கையை அழுத்தமாகவே சொல்கிறது.
திரைக்கதை
சென்னையில் தனியாக இருக்கும் ஒரு பெண் தலை வெட்டப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, ஒரு வருடம் ஆகியும் அந்த கொலையாளிகளை காவல்துறை பிடிக்காமல் இருக்கிறது.
காணொளி கேம் தயாரிப்பு நிபுணரான டாப்ஸி, பெற்றோர்களுடன் எதோ ஒரு மனக்கசப்புடன் வீட்டை விட்டு வெளியேறி, பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார்...!
அவருக்கு உறுதுணையாக வீட்டு வேலை செய்யும் வினோதினியும், ஒரு காவலாளி என மூன்று பேர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா இருந்தும் அவர்களைப் பிரிந்து தனிமையில் வாழும் டாப்ஸி, திடீரென்று இருட்டைப் பார்த்து பயப்படுவதோடு, அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார்....!
அவருக்கு புத்தாண்டு தினத்தில் நேர்ந்த கசப்பான சம்பவத்தை நினைத்து பயப்படுவதோடு, தற்கொலையும் செய்துகொள்ள முயற்சிக்கிறார்.....! அதே சமயம், அவரது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவின் மூலம் அவர் உயிர் பிழைப்பதோடு, அந்த டாட்டூ எதையோ அவருக்கு உணர்த்த முயற்சிக்கிறது....! இதனால் குழப்பமடையும் டாப்ஸி, மர்ம மனிதன் அவரை கொடூரமாகக் கொலை செய்வது போல கனவு காண்கிறார்...!
மர்ம மனிதர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் பெண்களில் ஒருவரது ஆன்மா, டாப்ஸியும் அதே மர்ம மனிதர்களால் கொலை செய்யப்படப் போவதை அவருக்கு உணர்த்துகிறது! அதை உணராத டாப்ஸி, தனக்கு மன ரீதியாகப் பிரச்சினை இருப்பதாக நினைத்து வருத்தமடைவதோடு, தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை நினைத்து வருந்துகிறார்....!
ஒரு கட்டத்தில் அவருடன் இருக்கும் அந்த ஆன்மா மூலம் அனைத்தையும் புரிந்துகொள்வார் ..!
தனக்கு வரும் ஆபத்தை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார், என்பது தான் இப்படத்தின் நேரடி கதை. ஆனால், இதை இப்படி நேரடியாகச் சொல்லாமல், அனைத்து விஷயங்களையும் மறைமுகமாகச் சொல்லி, திரைக்கதையை வித்தியாசமான முறையில் நகர்த்திச் சென்றிருக்கும் இப்படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

டிரான்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

நான் பார்த்து ரசித்த மலையாள திரைப்படம் டிரான்ஸ் (Trance )
எழுத்து, இயக்கம்,தயாரிப்பு: அன்வர் ரஷீத்
நடிகர்கள் : ஃபஹத் பாசில், நஸ்ரியா நாஜிம், கவுதம் வாசுதேவ் மேனன், சௌபின் ஷாஹிர், விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் பொதான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதை விமர்சனத்திற்கு முன்பாக நான் ஒன்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன் ...எல்லா மதங்களும் நம்பிக்கை என்ற ஒற்ற நூலில்தான் இணைந்துள்ளது...! ஒருவரின் நம்பிக்கையை சிதைக்க யாருக்கும் அனுமதியில்லை என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்! கடவுள் இருக்கிறது என்பதும் இல்லையென்பதும் அவர், அவர் நம்பிக்கையே.
மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தை,கூத்தை, இதுவரை வேறு எந்த மொழியிலும் சொல்லாத விதத்தில் சொல்லியிருப்பது பாராட்டக்குடியது.
கதை விமர்சனம்.
சிறுவயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியுடன் மிகப்பெரிய மோட்டிவேஷனல் பேச்சாளராக வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளுக்கிடையில் வாழ்க்கை கடக்கும் விசுபிரகாஷ் ( ஃபகத் ஃபாசில் )
மனநலம் பாதித்த தம்பியும் தற்கொலை செய்துகொள்ள, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துக்கத்திலும் தூக்கமின்றியும் வாடும் விசுபிரகாஷ் மும்பைக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் எனச் செல்கிறார்...!
தொழில் ரீதியாக அறிமுகமான ஒரு பெண் மூலம் கௌதம் மேனன், செம்பன் ஜோஸ் ஆகியோரை சந்திக்கிறார்.....! வாழ்க்கையில் தான் எதிர்பார்த்த நல்லதொரு எதிர்காலம் தொடரப்போகிறது...! என்ற நம்பிக்கையில் சென்ற அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது...! மத போதகர்கள் கட்டுக்குள் சிக்கி மாய்வதை விவரிக்கிறது....!
கிறிஸ்தவ மதத்தில் உள்ள சில போலி மத போதகர்கள் செய்யும் கூத்தை நேரடியாக விமர்சிக்கிறது கதைக்களம்....!
ஃபஹத் பாசில் ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களாலும் அதற்கு அவர் கொடுக்கும் நியாயமான நேர்த்தியான நடிப்பினாலும் உயர்ந்துகொண்டே போகிறார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை இசையுடன் சேர்ந்த காட்சியைப் பார்க்கும் நம்மை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டுசெல்கிறது....! அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களில் பார்ப்பவர்களின் மன ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும் வகையிலும், குழப்பம், ஆர்வம் எனப் பல இடங்களில் உணர்ச்சி வசப்படும்படி நம்மை ஆட்கொள்ளும் வகையிலும் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் இயக்குநர் அன்வர் ரஷீத் பாராட்டப்படவேண்டியவர் இந்தப் படத்தில் மதத்தை ஒரு போதைப்பொருளாக ஒரு கூட்டம் பயன்படுத்தி மக்களுக்கு அதைப் பழக்கப்படுத்தி காசு பார்க்கிறார்கள் என்பதை தைரியமாகச் சொல்கிறது. படத்தின் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள்.

அஞ்சாம் பாதிரா மலையாள திரைப்பட விமர்சனம்


நான் பார்த்து ரசித்த மலையாள திரைப்படம் அஞ்சாம் பாதிரா
எழுத்தும் இயக்கமும்; மிதுன பனுவல் தாமஸ்
நடிகர்: குஞ்சாக்கோ போபன் , நாம்யா நம்பீசன்,உண்ணிமய பிரசாத், மற்றும் பலர்.
கதை சுருக்கம்.
காவல் அதிகாரி ஒருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு மறுநாள் காலையில் கொலையாகிக் கிடக்கிறார்...!
உயிரோடு கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, இதயம் குடைந்து எடுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது....! ஆனால் கொலையாளி பற்றி சிறு தடயம் கூட கிடைக்கவில்லை.
இந்தக் கொலையை விசாரிக்கும் உயர் காவல் அதிகாரியின் நெருங்கிய நண்பர் குஞ்சாக்கோ போபன் ஒரு மனோதத்துவ பேராசிரியர். காவல்துறை விசாரணைக் கைதிகளை மனோதத்துவ முறையில் விசாரணை செய்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் அவருக்கு, ஒரு டிகிரி முடித்தால் கொச்சி மனோதத்துவக் கல்லூரியில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் தற்காலிக பேராசிரியர் வேலை நிரந்தரமாகும் என்ற நிலையில் காவல்துறைக்கு உதவியாக இருக்கிறார்.
எப்பவும் குற்றவாளிகளின் மனநிலையை உற்று நோக்கும் குஞ்சா போபன் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு, இதேபோல் மீண்டும் ஒரு கொலை நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை காவல் அதிகாரிக்குத் தெரிவிக்கிறார் ...! இதைக் கேட்ட காவல் உயர் அதிகாரி அலட்சியமாக நடந்துகொள்ள....! அவர் சொன்ன மாதிரியே அத்தநாள் ஒரு காவல்துறை அதிகாரி அதே பாணியில் கடத்தப்பட்டு, கண்கள், இதயம் குடையப்பட்டு பிணமாக ஏஎஸ்பி அலுவலகத்தில்
கிடக்க காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியாகிறது...!
இப்போது பிணத்தின் அருகே, கண்கள் திறந்திருக்கும் நிலையில் செய்யப்பட்ட ஒரு நீதி தேவதையின் சிலை. ஆனால் கொலையாளி பற்றிய தடயம் எது கிடைக்கவில்லை, இப்படியே மூன்று கொலைகள் நடக்கிறது...!
மூன்று கொலைகளுக்கும் சிறு தடயம் கூட கிடைக்காத குஞ்சா போபவனுக்கு நான்காவது கொலையில் சிறு தடையம் கிடைக்கிறது....! அதன்மூலம் கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே கதையின் விறுவிறுப்பு.
படத்தில் யார் கொலை செய்கிறார்கள்...? எதற்காக என்ற கேள்விகளை நம்மிடையே எழுப்பி விட்டு, படம் முடியும் வரை நம்மை பரபரப்பிலேயே வைத்திருக்கிறது திரைக்கதை. இந்த மாதிரிப் படங்களில் தொடர் கொலையாளிமேல் ஒரு பரிதாபம் வர வைக்கும் ஒரு கிளைக்கதையும் இருக்கிறது.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம்
ஸ்லோவாகதான் நகர்கிறது. மலையாளப் படங்களில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பவற்றில் முக்கியமாக இருப்பது அந்த நிலப்பரப்பும், கதையில் இருக்கும் யதார்த்தமும்தான்.
படம் தொடக்கமுதல் கடைசிவரை எந்த ஒரு ஆரவாரமின்றி கதையின் தேவைக்கேற்ப விறுவிறுப்புடன் நகர்கிறது. தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனைப் பற்றிய திரில்லர் படமாக உருவாக்கியிருப்பதால் பார்வையாளரைப் பெரிதும் கவர்கிறது.
படம் பார்த்து முடிக்கையில் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்ததுபோல் இருந்தது.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பதிப்பு 5.25 மலையாள திரைப்பட விமர்சனம்

என்னைக் கவர்ந்த மலையாள திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பதிப்பு 5.25
எழுத்தும் இயக்கமும் ; ரித்தீஷ் பாலகிருஷ்ணன் பொட்டல்
நடிகர்கள்: சூரஜ் வெஞ்சராமுடு, மற்றும் சுபின் சவுபின் ஷாஹிர் இருவரின் நடிப்பில் மீண்டும் ஒரு சிறந்த படம்.

வயதான தந்தையை கவனித்துக்கொள்ள முடியாமல் போராடும் மகனின் பாசப் போராட்டமே இப்படத்தின் கதை. இப்படத்தின் கதை ஒரே வரியில் சுருக்கமாக விவரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் படத்தின் கதையை காட்சிப்படுத்துவதில், உணர்ச்சிகளுடன் கருப்பொருள்களை விரிவாக விவரிக்கிறார் இயக்குநர்...!
பாஸ்கரன் (சூரஜ் வெஞ்சரம்மூட்) மூர்க்க குணம் கொண்ட வயதான முதியவர், இவரால் எல்லோரோடும் இணைந்து இயல்பாக வாழமுடியாத பழைமைவாதி, கடந்த காலத்தின் ஒட்டுமொத்த உருவமென்றே சொல்லலாம்! பொறியியல் பட்டப்படிப்பு படிக்கவைத்தும் ஊருக்கு வெளியே வேலை செய்யக்கூட அனுமதிக்கப்படுவதில்லை....!
இதனால் மகனுக்கு கிடைத்த பல நல்ல வேலை வாய்ப்புகள்பறிபோனது!கல்யாண வயதைக் கடந்து போனதால் ஊர் மக்கள் மற்றும் நண்பர்களாலும் கேலிக்குள்ளாக்கப்டும்போது சுப்ரமணியனுக்கு ரஷ்யாவில் பணிபுரிய ஒரு நல்லவேலை வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தனது தந்தையை நண்பர் உதவியுடன் செவிலியரின் கைகளில் விட்டு விட்டு தனக்கான வாழ்வை வாழ ரஷ்யா சென்றுவிட்டார்......! .
அப்பாவிற்கு பணிவிடை செய்ய எத்தனையோ பணிப்பெண்களை வைத்தும் சரிப்பட்டு வராததால் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து ஆண்டு விடுமுறைக்கு தாயகம் வரும்போது, தனது தந்தைக்கு ஒரு ரோபோவைக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்து இனிமேல் இந்த ரோபோதான் உங்களுக்கு எல்லாப் பணிவிடையும் செய்யுமெனச் சொல்ல.....!
டே..! எதைச் செய்தாலும் ஆழ்மனதிலிருந்து அன்போடு செய்யவேண்டும், கடைமைக்கு செய்யாதே! என்று சொல்ல அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மனப் போராட்டம் தொடர்கிறது.....!
எந்த நவீனத்தையும் ஏற்காதா தந்தை கொஞ்சம், கொஞ்சமாக ரோபோவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள சில சூழ்நிலைகள் அமைய! நல்ல நகைச்சுவையுடன் காட்சிகளுடன் கதை நகர்கிறது...!
உள்ளூர்வாசிகள் அன்பாக ரோபோவுக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள் - குஞ்சப்பன் ..! குஞ்சப்பனின் வருகை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
சூரஜ் வெஞ்சராமுடு நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிக கச்சிதமாக இருந்தது, மலையாளத்தில் திலகனைத் தவிர வேறு யாரையும் அந்த காதா கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாது.
தமிழில் இந்திரன் 2 வை நினைவு படுத்தினாலும் இது முற்றிலும் வேறுபட்ட கதைக்கருவுடன் கூடிய மலையாளிகளுக்குண்டான நகைச்சுவை நிறைந்த தந்தைமகனுக்குண்டான பாசப் போராட்டம் .

லூகா மலையாள திரைப்பட விமர்சனம்

நான் பார்த்து ரசித்த சிறந்த மலையாள காதல் திரைப்படம் நான் பார்த்து ரசித்த சிறந்த மலையாள காதல் திரைப்படம் லூகா.
எழுத்தும் இயக்கமும் அருண் போஸ், மிருதுல் ஜார்ஜ்
லூகா (டோவினோ தாமஸ்) புகழ்பெற்ற ஸ்கிராப் கலைஞரான இவரை நிஹா (அஹானா கிருஷ்ணகுமார்) என்ற பெண், படிப்பு ஆராட்சிக்காகச் லூகாவைச் சந்திக்கிறார்....! இது ஒரு வழக்கமான காதல் கதைபோல் இல்லாமல் வித்தியாசமாக நகர்கிறது....! இவ்விருவரின் காதல் கதையை ஒரு திறந்த புத்தகமாகவும், நெறுக்கமான பிணைப்புடன் நகர்கிறது!

படக்காட்சிகள் முழுவதும் நல்ல வெளிசத்துடன் வெளியில் எடுக்கப்பாட்டிருக்கும்.
மற்றொரு காதல் கதை காவல் அதிகாரி அக்பர் (நீத்தின் ஜார்ஜ் ) மற்றும் அவர் மனைவி பாத்திமா (வினிதா கோடி) இருவரின் காதல் கதை படம் முழுவதும் மர்மத்தோடு மழைக் காட்சியோடு தொடர்கிறது....! மழைக் காட்சியில் ஒளிப்பதிவாளரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
லூகா - அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்படுகிறது, முக்கிய விசாரணைக் காவல் அதிகாரி (அக்பர்) காவின் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார், எல்லோரும் இது ஒரு தற்கொலை என்றே முடிவு செய்ய....! காவல் அதிகாரி அக்பர் மட்டும் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்துடன் நோட்டமிட , முன்னாள் காதலியின் நாட்குறிப்பு ஒன்று கிடைக்க அதை எடுத்துக்கொள்கிறார்.
பெங்களூரில் ஒரு பெண் இதேபோல் மர்மமாக இறந்து கிடந்ததாகத் தகவல் கிடைக்க ( காவின் காதலி ) இந்த இரு மரணங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தற்கொலைகளைப் போலத் தோற்றமளித்தாலும், அக்பர் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பைக் கண்டு அதன் பின் செல்கிறார்....!
அக்பர் வழக்கு விசாரணைக்காக எடுத்துச் சென்ற நாடக்குறிப்பை வாசிக்கத்தொடங்குகிறார், அவர் வாசிக்க, வாசிக்க ஒரு அழகான ஓவியத்துடன் ஆழமான காதல் கதை விரிகிறது..!
படத்தில் அக்பரின் வாழ்க்கை ஒரு மர்மமான சோகத்தைத் திரை முழுவதும் தொடர்கிறது....! நாடக்குறிப்பை வாசித்து முடிக்கையில்
அக்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலிருந்த கருத்துவேறுபாடுகள் களைந்து ஒரு நெருக்கமான அன்பை விதைத்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
படம் பார்த்து முடிக்கையில் ஒரு சோகமான, காதல் நெருக்கம் நம் நெஞ்சில் நின்று நீங்க மறுக்கிறது ....காதலை நேசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காதல் படம்.
எழுத்தும் இயக்கமும் அருண் போஸ், மிருதுல் ஜார்ஜ்
லூகா (டோவினோ தாமஸ்) புகழ்பெற்ற ஸ்கிராப் கலைஞரான இவரை நிஹா (அஹானா கிருஷ்ணகுமார்) என்ற பெண், படிப்பு ஆராட்சிக்காகச் லூகாவைச் சந்திக்கிறார்....! இது ஒரு வழக்கமான காதல் கதைபோல் இல்லாமல் வித்தியாசமாக நகர்கிறது....! இவ்விருவரின் காதல் கதையை ஒரு திறந்த புத்தகமாகவும், நெறுக்கமான பிணைப்புடன் நகர்கிறது!
படக்காட்சிகள் முழுவதும் நல்ல வெளிசத்துடன் வெளியில் எடுக்கப்பாட்டிருக்கும்.
மற்றொரு காதல் கதை காவல் அதிகாரி அக்பர் (நீத்தின் ஜார்ஜ் ) மற்றும் அவர் மனைவி பாத்திமா (வினிதா கோடி) இருவரின் காதல் கதை படம் முழுவதும் மர்மத்தோடு மழைக் காட்சியோடு தொடர்கிறது....! மழைக் காட்சியில் ஒளிப்பதிவாளரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
லூகா - அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்படுகிறது, முக்கிய விசாரணைக் காவல் அதிகாரி (அக்பர்) காவின் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார், எல்லோரும் இது ஒரு தற்கொலை என்றே முடிவு செய்ய....! காவல் அதிகாரி அக்பர் மட்டும் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்துடன் நோட்டமிட , முன்னாள் காதலியின் நாட்குறிப்பு ஒன்று கிடைக்க அதை எடுத்துக்கொள்கிறார்.
பெங்களூரில் ஒரு பெண் இதேபோல் மர்மமாக இறந்து கிடந்ததாகத் தகவல் கிடைக்க ( காவின் காதலி ) இந்த இரு மரணங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தற்கொலைகளைப் போலத் தோற்றமளித்தாலும், அக்பர் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பைக் கண்டு அதன் பின் செல்கிறார்....!
அக்பர் வழக்கு விசாரணைக்காக எடுத்துச் சென்ற நாடக்குறிப்பை வாசிக்கத்தொடங்குகிறார், அவர் வாசிக்க, வாசிக்க ஒரு அழகான ஓவியத்துடன் ஆழமான காதல் கதை விரிகிறது..!
படத்தில் அக்பரின் வாழ்க்கை ஒரு மர்மமான சோகத்தைத் திரை முழுவதும் தொடர்கிறது....! நாடக்குறிப்பை வாசித்து முடிக்கையில்
அக்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலிருந்த கருத்துவேறுபாடுகள் களைந்து ஒரு நெருக்கமான அன்பை விதைத்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
படம் பார்த்து முடிக்கையில் ஒரு சோகமான, காதல் நெருக்கம் நம் நெஞ்சில் நின்று நீங்க மறுக்கிறது ....காதலை நேசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காதல் படம்.

விக்ருதி மலையாள திரைப்பட விமர்சனம்

என்னைக் கவர்ந்த சினிமா
சமூகத்தில் சமூக ஊடகங்களின் மோசமான விளைவுகளைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் வந்திருந்தாளும், மலையாளத்தில் 2019 ல் வெளிவந்த Vikruthi என் மனதை மிகவும் கவர்ந்த படம்.

அப்படத்தின் இயக்குநர் திரு.ஜோசப் அவர்கள் சமூக ஊடக இயக்கவியலால் பொதுவாக இயக்கப்படும் பார்வையாளர்களுக்கு ஒரு சரியான நேரத்தில், சரியான செய்தியை நுட்பமாகத் தெரிவிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது - சமீர் (சவுபின் ஷாஹிர்) மற்றும் எல்டோ (சூரஜ் வெஞ்சாரம்மூடு). இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சித்தரிப்பதன் மூலம் படம் தொடங்குகிறது.
எல்டோவுக்கும்,அவர் மனைவி சுராபி லட்சுமிக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளது. இருவருக்கும் அழகான ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிகவும் எளிமையான குடும்பம்.
சமீர் அரபு நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர், சமூக ஊடகங்கள் மூலம் தனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதில் மிகவும் பிடிக்கும் அவருக்கு...!
அந்நிய தேசத்தில் தன் இளமையைத் துளைத்துவிட்டு காலம் கடந்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது....! அதற்கிடையில் அவர் ஒருநாள் விளையாட்டாகக் கொச்சி மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்த எல்டோவின் படத்தைக் கிளிக் செய்து நண்பர்களுக்கு பகிர்வார்....! அந்தப் படம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நெட்டிசன்களிடையே பரப்பப்பட்டபோது இந்த சம்பவம் ஒரு மாறுபட்ட திருப்பத்தை ஏற்படுத்துகிறது....!
இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியமான படம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படம், காணொளிகளைப் பகிர்ந்து அதன் மூலம் அற்ப லைக் கிடைப்பதைக் கண்டு அகம் மலரும் நபர்களுக்கு, அந்தப் புகைப்படத்தினால் ஒரு குடும்பமே பாதிக்கப்படுகிறது என்பதை உணர்வதில்லை. உணராத நபர்களுக்கு இப்படம் அர்ப்பணம்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...