ஞாயிறு, 9 டிசம்பர், 2012

எது பெண் அடிமை

  மனித இனத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆண், பெண் தங்கள் காம உணர்வை புணர்ந்து தீர்த்து கொள்வதும், ஆண் தன் இச்சை தீர்ந்ததும் தன் வேலையை பார்த்துக் கொண்டு சென்றுவிடுவதுமாக இருந்தான். பெண்ணே அதன் விளைவுகளை தனியாக எந்த பாதுகாப்பும் இன்றி, கேட்பாரற்று, வலியையும், வேதனையையும் சந்தித்து, குழந்தைகளை ஈன்று,பாலூட்டி, குறிப்பிட்ட நாள் வரை வளர்த்து வந்தாள்.

    தான்தோன்றி தனமாக திரிந்த ஆண் பிறகு நாகரிக வளர்ச்சியின் பொழுது, கருவுற்று உடல் உபாதையுடன் இருக்கும் பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்க தொடங்கினான்.

 ஒரு பெண், கட்டுப்பாடு இன்றி திரிந்த ஆணை தன் பால் ஈர்த்துதன்னை பாதுகாப்பவனாக மாற்ற அவளிடம் உள்ள ஒரே சக்தி அன்பு என்னும் சக்தி மட்டுமே.

    

இந்த அன்பு என்னும் ஈர்ப்பு சக்த்தியே அந்த ஆண் மற்றும் பிள்ளைகளை பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்கவும், ஒரு கட்டுகோப்பான குடும்பம் உருவாகவும் காரணமாக அமைகிறது.

       அதாவது, சூரிய குடும்பத்தில் அணைத்து கோள்களும் நடுநாயகமான சூரியனை சுற்றி வந்து ஒரு கட்டுக்கோப்பான குடும்பமாக இருப்பதற்கு முக்கிய காரணம், சூரிய குடும்பத்தில் உள்ள அணைத்து கோள்களின் மீதும் சூரியன் கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி ஆகும். அதே போல் மனித இனத்தில் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பான அமைப்பிற்கு முழுமுதற் காரணம் குடும்பத்தின் நடுநாயகமான பெண் தன் குடும்பத்தில் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பு என்னும் ஈர்ப்பு சக்த்தியே ஆகும். இந்த ஈர்ப்பு சக்தியால் சூரியன் பாதுகாக்கப்படுகிறதோ, இல்லையோ ஆனால், பெண்  நிச்சயம் பாதுகாக்கப்படுகிறாள்.

 இந்த அன்பு என்னும் ஆதார சக்தியே அணைத்து ஆண்களுக்கும் பெண்களை பாதுகாக்கவேண்டும் என்ற உள் உணர்வுக்கு காரணமாக உள்ளது. ஒரு ராணுவ வீரனுக்கு தன் நாட்டை தந்தை நாடு என்று சொல்லி கற்பிப்பதை விட தாய் நாடு என்று சொல்லி கற்பிக்கும் பொழுது தான் தன் தாய் நாட்டிற்காக எதனையும் செய்ய துணியும் அற்பணிப்பு உணர்வு மேலோங்குகிறது. ஒரு ஆணுக்கு தன் தந்தை துன்பப்படும் பொழுது தோன்றும் வீரத்தை விட தன் தாய் துன்பப்படும் பொழுது தோன்றும் வீரமே மேலோங்குகிறது. தினமும் குடித்துவிட்டு பொறுப்பற்று தன் மனைவியை அடித்து உதைக்கும் காட்டுமிராண்டி கணவன் கூட தன் மனைவியை மற்றவர்கள் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான். ஒரு தந்தை அல்லது தாய் தங்கள் பிள்ளைகளை திட்ட, அடிக்க தனக்கு உரிமை உள்ளதாக நினைப்பதை போல் குடிக்காரனும் தன் மனைவியிடம் அடிக்கவும், அணைக்கவும் உரிமை எடுத்து கொள்கிறான். படித்த நாகரிகமான ஆண் தன் அன்பான மனைவியை துன்புறுத்த மாட்டான். பாதுகாப்பாக மட்டுமே இருப்பான். இதுவே அன்பு என்னும் ஈர்ப்பு சக்தி உள்ள பண்பான பெண்களை பற்றி பெரும்பாலான ஆண்களின் பொதுவான மனநிலை.

       ஆனால், இன்று இந்திய தேசத்தில் உள்ள பெண்களை தங்களின் நுகர்வோர்களாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய குடும்பங்களை சிதைத்து பெண்களை பிரித்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதற்க்கு பெண்களுக்கு பாதுகாப்பாக பெண்களிடம் இருந்த குடும்பத்தின் ஆதார சக்த்தியான அன்பு என்னும் அஷ்த்திரத்தை அழித்து பெண்களிடம் சுயநலத்தை விதைக்கும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்னும் மயக்க பிஸ்கட்டுகளை பிரபளபடுத்தி வருகின்றனர். பெண்களுக்கு தான்தோன்றி தனத்தை கற்பித்து, ஊக்கப்படுத்த ஊழல் அரசியல்வாதிகளின் துணையோடு ஆண்களை அடிமையாக்கும் அநியாய சட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

        அன்பு என்னும் ஆயுதத்தால் தங்களை தாங்களே பாதுகாத்து வந்த இந்திய பெண் இனம் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் மகுடிக்கு ஆடும் விசப்பாம்புகளாக உருமாறி வருகின்றனர். இவர்கள் குடும்பங்களில் அன்பு என்னும் ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில், தன் கணவனை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தானே கொலை செய்யவும் துணியும் நிலையில், தனது கள்ளதனத்தை நேரில் கண்ணுற்ற தனது பிள்ளைகளையே கொல்லும் நிலையில், இனியும் பெண்கள் ஆண்களால் பாதுகாக்கப்படுவார்களா ?
 ஆண்கள் இவர்களை பாதுகாத்து தான் ஆக வேண்டுமா ? மனித இனத்தை உற்பத்தி செய்யும் இந்த உயிருள்ள ஜடங்கள் பாதுகாக்கப்படவில்லை எனில் மனித இனம் அழியும் காலத்தை எதிர்நோக்கியுள்ளதா ?

இவைகள் எல்லாம், கலிகாலத்தின் பெரும் பகுதியை கடந்து வந்துகொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் நினைவூட்டுகிறது.




கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...