வியாழன், 22 பிப்ரவரி, 2018

குற்றப்பரம்பரை


புத்தகத்தை வாசிக்கும்போதே எனக்கு புலப்பட்டது மூன்று கிராமத்தை மொத்தமாக வாசிக்கவில்லை! சுவாசித்திருக்கிறார் திரு. வேல ராமமூர்த்தி.

கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறப்டுவதில்லை! வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும்.

நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது.

மேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வியால் அழகாய் பிரதி பலிப்பததோடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை! அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது.

ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போது நம்மை அந்த இடத்திற்க்கே அழைத்து செல்கிறது.

நாவலை மொத்தமாய் படித்து முடிந்ததும் என்னை ஆசுவாசபடுத்திக்கொள்ள வெகுநேரம் பிடித்தது! கூலாணி கிழவி அன்று இரவு முழுக்க அழுகையும், ஆங்காரமும் நின்று கொண்டு என்னை தூங்கவிடவில்லை.

ஒரு தந்தைக்கும் மகனுக்குஇருக்கும் பாச போராட்டம், தன் மக்களுக்காக உயிரை எடுப்பது அல்ல உயிரை கொடுப்பவன் தான் நல்ல தலைவன்! நல்ல தலைவனாகத் திகழ்கிறது இந்த நாவல்.

பசியால் வாடும்போது தன்னை பற்றி சிந்திக்காமல் தன் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரு நல்ல தலைவனாக வாழ்கிறார் திரு  வேய.

பச்சை முத்து போன்ற சுயநலம் பிடித்த மனிதனால் ஒரு கிராமமே குற்றப்பரம்பரையாக நிக்கும்போது மனசுக்குள் வலித்தது!

கைக் குழந்தை வேலுச்சாமியை வேயன்ன தூக்கி கொஞ்சும்போது நம்மால் உணர முடிகிறது கரடு முரடான வாழ்க்கைக்குள்ளும் ஒரு கைகுழ்ந்தையாகி போனார் திரு வேயன்ன.

கிராமத்துக்குள் இருக்கும் ஒற்றுமையை ஒரே வரியில் சொல்லிருப்பார் கோர்டில் தீர வேண்டிய தீர்ப்பு குலசாமி முன் தீர்ந்தது என்று.

வாசிக்கும்போது கிராமத்துக்கு உண்டான கவிதை நயத்தோடு இருந்தது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று பனமரத்து குமரி உடுத்துன துணிஒதுங்கி கிடந்தாலும் இழுத்து மறைக்க எட்டு நாழி ஆகும் .

செம்மங்கி ஆற்றங்கரையில் வஜ்ராயினி, வேலாயுத காதல் கதை வசிக்க வாசிக்க ஒரு கனவு உலகத்துக்குள் நம்மை கொண்டு செல்கிறது.

காசு பணம் இருந்தும் நல்ல மனசு இல்லாத சுப்பையா அனாதையாக செத்துக்கிடந்தார் இதை வாசிக்கும் போது மனிதனின் நிலைபுரிந்தது.

அங்கம்மா மகன் சேதுவுடன் பெருநாழி போக மறுத்து அழும்போது வேயன்ன சொல்வார் ''அடி கிறுக்கு கழுத அங்க என்ன புலி, சிங்கமாஇருக்கு'' என்று சொல்வார்.... அதுக்கு அங்கம்மா சொல்வாள்.
''புலி, சிங்கத்தை பார்த்தா பயம் இல்ல எனக்கு இந்த மனுசப்பயல பாத்தா தான் பயமா இருக்கு''  என்பாள். உண்மையை எதார்த்தமாக எழுதியிருப்பார்.

பச்சமுத்து போன்றோர்களை அடையாளம் கண்டு அழிக்கவில்லை என்றால் கொம்பூதி மட்டுமல்ல தமிழ்நாடே ஒரு ககுற்றப்பரம்பரையாகி போய்விடும் .

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...