செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

காதலும் காதலியும்



என் அன்பு காதலியே
உன்னை ஒவ்வொரு பக்கமாய்
தேடி தேடி வாசிக்கிறேன்!
கவிதையாய்
கட்டுரையாய் 
இலக்கியமாய் 
என் தேடல்த நீண்டு கொண்டே போகிறது!

என் இதழ் ஈரத்தில் 
உன்னை ஒவ்வொரு பக்கமாய் 
புரட்டிப் புரட்டி வாசிக்கிறேன்!

என்  தேடலுக்குள்
காதலும், காமமும்
கலந்தே இருக்கிறது!

எனக்கான தேடலும் தேவையும் 
உனக்குள்ளேயே இருந்திருக்கிறது!

உனக்குள்ளே இருக்கும்
வல்லினம் ,மெல்லினம் , இடையினம் 
புரியவில்லை இன்னும் எனக்கு!

பத்து வருட
வாசிப்பில் இன்னும்
இலக்கணப்பிழை
இருக்கத்தான் செய்கிறது நமக்குள்!

சில நேரங்களில்
உன்னை தலைக்கு வைத்தே
உறங்கியிருக்கிறேன்
அப்போழுதும்
தலையணையாய் நீதான்!

நீ இல்லாத போது
உன் வாசிப்பின் 
நினைவிலே நாட்களை கடத்துகிறேன்!

உனக்குள்ளேயே
நான் இருப்பேனா?
இல்லை உன்னை தேடி தேடி 
என் இ'மைநீத்து
இற(ப்)பேனா?

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...