வெள்ளி, 1 ஜூன், 2018

கனவு





நாற்பது தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் முப்பத்தேட்டாவது மாடியில் நண்பர்களுடன்  குடியிருக்கிறேன்!....
என் தளத்தின் மேலிருந்து கீழே இறங்க லிப்டுக்காகக் காத்திருக்கிறேன்...!

என் அருகில்  ஒரு வயசான பாட்டியும், முப்பது வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களும் , எட்டு வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்குழந்தைகள் எல்லோரும் லிப்டுக்காகக் காத்திருக்கிறோம்!..... 
லிப்டு வரக் காலதாமதம் ஆகிறது....
என் அருகில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்கள் ஏதோ அவர்களுக்க மட்டும் கேட்கும் அளவுக்கு  எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள், இரண்டு குழந்தைகளும் லிப்ட் பட்டனை மேலும் கீழும் அழுத்திக்கொண்டே இருந்தார்கள், அதைப் பார்த்த  பாட்டி அந்தக் குழந்தைகளை அதட்டினாள்ஒரு குழந்தை ஓடி வந்து அம்மாவின் சேலையைப் புடுச்சு இழுக்க  , அந்த அம்மா அந்தக் குழந்தையைத் தள்ளி விடுகிறாள், அந்தக் குழந்தை ஒடி வந்து என்னைச் சுற்றி ஒரு வட்டமிட்டு மீண்டு அவள் அம்மாவின் கால்களைப் பிடித்துக்கொண்டது.

நான் இதையெல்லாம் பார்த்தும் பார்க்காததுமாக நிற்கின்றேன்,  நான் அவர்களைக் கவனிப்பதை  ஒரு பெண் சாடையாகப் பார்க்கிறாள்!

நான்  லிப்டின் அருகில் மரப் பெஞ் கிடந்தது அந்தப் பெஞ்சில் உக்காந்து என் மொபைல் போனை எடுத்து எதோ ஒன்றைத் தேடுவது போல் பாசாங்கு  செய்கிறேன்....!

சட்டென ஒரு கதவு அடைக்கும் சத்தம் கேட்டது,மெல்லத் திரும்பிப் பார்க்கிறேன்!...

இருபத்தெட்டு  வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வேகமாக ஓடி வருகிறாள்....அவள் கையில் மொபைல் போனும், வீட்டுச் சாவியும் இருந்தது அவளைப் பார்க்கும்போது திருமணமாகாத பெண்ணாகத்தான் இருக்கவேண்டும், அவள் அப்படித்தான் இருந்தாள்!...
அவள் வேகமாக ஓடிவந்து லிப்டு பட்டனை அழுத்தினாள்... 

சிறு நிதானத்திற்குப் பின் நாங்கள் எல்லோரும் லிப்டுக்காக காத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டாள்!.

அவளை விட்டு விலக மறுத்தது என் கண்கள்....

ஒரு சிறு பார்வையிலேயே முழுக் கவிதைத் தொகுப்பையும் எழுதிவிட்டு எழுத்துப் பிழை சரிபார்க்கத் தொடங்கிவிட்டது என் கண்கள்!... 
நான் எந்தப் பெண்ணையும் இப்படிப் பார்த்ததில்லை, ஏனோ இவளை மட்டும் பார்த்ததும் எனக்குள் பல நாட்கள் பழகியதுபோல் இருந்தது. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே நிலைதடுமாறிப் போனேன்.

அவள் அவ்வளவு அழகு, உயரத்தை அளந்தே  உடலை வளர்த்திருக்கிறாள் , முன்னும் பின்னும் எங்கோ கடன் வாங்கியிருக்கிறாள், வாங்கிய கடன் மட்டும் ஆடைக்குள் அடங்கவில்லை, மேலாடை டிசர்ட்டும், கீழாடை ஸ்கர்ட் உடுத்தியிருந்தாள்....!

அவள் காதின் வளையம் கழுத்தோடு தாளமிட , இழுத்துப்பின்னிய சடை யில் சில முடிகள் கட்டுமீறி நடனமாட,  என் மொத்தப் பார்வையும் அவள் மூக்குத்தி பறித்துக்கொள்ள, சிறிது நேரம் பார்வையற்றுப் போனேன்...!

நான் அவளை பார்ப்பதைப்  அவள் பார்த்துவிட்டாள், அவள் கன்னமும் மூக்கும் கோவைப் பழம் போல் சிவந்திருந்தது,என்னைப் பார்த்ததும் குனிந்துகொண்டாள் , அவள் கண்கள் மட்டும் சொட்டுச் சொட்டாய் கண்ணீரைத் தரையில் சிந்தியது.....!

அவள்உதடு உடம்பின் மொத்தச் சூட்டையும் உள் வாங்கிச் சிவந்திருக்க என் மனசு எழுதிய மொத்தக் கவிதைத் தொகுப்பையும் ஒரு நொடியில்  கிழித்தெரிந்துவிட்டு அவள் அழுகையின் பாதியை என் கண்கள் பங்குபோட்டுக்கொண்டது!

என் அருகில் வா ...வந்து உட்காரு...யென என்கண் பார்வை உலகப் பொதுமொழி பேசியதைப் புரிந்துகொண்டாள், அவளும் மெல்ல வந்து என் அருகில் உட்கார்ந்தாள்!

நான் படிக்கும்போது zoology ஆசிரியர் திரு .வேலுச்சாமி அவர்கள் சுறப்பிகளை பற்றி  பாடம் நடத்தியது நினைவுக்கு வந்தது....
யாராவது மிக மனவேதனையோடு இருந்தால் அவர்களை அருகில் அமர்த்தி முதுகுத் தண்டுவடத்தில் மெதுவாகத் தடவிக்கொடுத்தாள் அவர்கள் மனசு இலகுவாகிடும், என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது...!


நான் அவள்தோளில் கை போட்டுக் கழுத்துக்குக் கீழே முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தேன், அவள் சட்டென என் தோளில் சாய்ந்து கொண்டாள்..!

கொஞ்சம் கொஞ்சமாக அவள் கோபமும், அழுகையும்  குறைந்தது.

லிப்ட் நாங்கள் இருக்கும் தளத்தில் வந்து நின்றது....

கதவு திறப்பதற்குள் குழந்தைகள்  கதவை இழுக்க மெல்லத் திறந்ததுகுழந்தைகள் முதலில் உள்ளே போனதும் கண்ணாடியை பார்த்துக் கதை பேச , மற்ற மூன்று பெண்களும் உள்ளே போக, அதில் ஒரு பெண் மட்டும் லிப்ட் கதவை பிடித்துக்கொண்டாள்....!

அந்தப் பாட்டி மெதுவாக  நடந்து லிப்ட் உள்ளே போக , எல்லோரும் எங்களைப் பார்த்து வேகமாக வாங்க எனக் கண் பார்வையிலேயே பேசினார்கள்.

நான் அவளை அணைத்தவாறே லிப்டுக்குள் செல்கிறேன், அவள் தலையை நிமிர்த்தி என் இடுப்பில் இறுக்கி அணைத்த கைகளை பிரிக்க முயற்சித்தேன்,  என் முயற்சி தோல்வியில் போனது!

லிப்ட் கதவு மூடிக்கொண்டது , அவள் என்னை இருக்கி அனைத்து முத்தமிடத்  தொடங்கிவிட்டாள், அவளுக்குள் இருந்த கோபத்தின் மொத்தச் சூட்டையும் எனக்குள் பரவச்செய்கிறாள், நானோ நிலை தடுமாறி புழுவாய் நெளிகிறேன்...!

அவள் பூவகிப்போனால் ,நான் நாரகிப்போனேன். இரண்டும் பின்னியே மாலையானது...!

என் அருகில் இருந்த மற்ற பெண்கள் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள், ஒரு தாய் இரண்டு குழந்தைகளையும் இழுத்து தன் சேலையால் மூடி தன் குழந்தையை அணைத்துக்கொண்டாள்.

லிப்ட் கீழ் தளம் வந்துசேர்ந்தது....

எல்லோரும் அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்நானோ செய்வதெரியாது தடுமாறி நின்றேன் அவள் என்னை விடுவதாயில்லை, என்னை எங்காவது கூட்டிட்டுப் போ என்கிறாள்...!

நான் எங்கே போவது...’’ஒகே வா’’.. பைக்கில் சாவி போட்டு ஸ்டார்ட் பன்ன அவளோ
 ‘’நான் பைக்கில் வரலை’’ என்கிறாள்.

வேறென்ன செய்வதென அறியாது திகைத்து நின்றேன்.

‘’காரில்தான் வருவேன்’’ என்றாள்...  

என் கார் சாவி வீடில் இருக்கிறது’’ என்றேன்...

‘’உன்னிடம் கார்சாவி இறுக்கே அதில் போகலாம்’’என்றேன்...

அவளோ ‘’என் கார் பஞ்சர்’’ என்றாள்....

 ‘’இங்கேயே நில்லு நான் அஞ்சு நிமிடத்தில் வருகிறேன்’’
என்று சொல்லிவிட்டு வேகமாக லிப்டில் ஏறிப் பிளாட்டுக்குள் போனேன்...

‘’ என்னடா  போனதும் வந்துட்டா’’ என்றான் என் நண்பன்...

 நான் அவனிடம் பணம் கேட்டல் எதற்கு என்று கேப்பான் என்ன செய்வதெனத் தெரியாமல் அவனிடம் பேச்சுக்கொடுக்க, அவனோ என்னை மெய்மறக்கப் பேசி இருபது நிமிடம் இருக்கவைத்துவிட்டன்...!

‘’யே!... மழை வருதே வண்டியை எங்கே நிப்பட்டுனாய்’’ 

என நண்பன் கேட்க அப்பத்தான் எனக்கு நாபகம் வருகிறது. ஒருத்தியை வெளியில் விட்டுட்டு வந்தது....

லிப்டை புடுச்சு  கீழே போனால் வானம் மெல்லத் தூருகிறது....

கொஞ்சத் தூரம் நடந்து அங்கும் இங்கும் தேடிப்பார்க்கிறேன் அவள் மழைக்கு ஓர் இடத்தில் ஒதுங்கி நின்றாள். அவள் கூட நிறையா குழந்தைகள் விளையாடிக் கொண்டிருதார்கள், நான் அங்கேயே நின்றுவிட்டேன் அவள் என்னைப் பார்த்ததும் விளையாடுவதை நிறுத்திவிட்டு என் அருகில் வந்தாள்.

‘’இவ்வளவு நேரமா எங்கே போனாய்’’....என்றாள்

‘’என்னிடம் பணம் இல்லை அதான் கொஞ்சம் லேட்டு’’ என்றேன்

‘’பணம் எதற்கு நான் தற்கொலை செய்துகொள்ளத்தான் வந்தேன்’’ என்றால்

ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றேன்!....

‘’அப்பொழுது  உன் கருணைப்பார்வையும் உன் தழுவலும், மழையும், இந்த குழந்தைகளின் சிரிப்பும், என் தற்கொலை எண்ணத்தை மாற்றியது’’ என்றாள்....!

நான் அங்கேயே திகைத்து நின்றேன்...!

அவள் யார் ? எங்கிருந்து வந்தாள் ? அவளுக்கான கோபம் என்ன? அவள் ஆசைதான்  என்ன? ஏன் என்னைக் கண்டதும் கட்டி அணைத்தாள், முத்தமிட்டாள்?

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதிற்குள்  என் அலைபேசி  என்னை எழுப்பிவிட்டது..!

மீண்டும் கண் மூடித் தூங்கிப் பார்த்தேன் அவள் வருவதாக இல்லை..!

எல்லா இரவும் அதே இடத்தில் தூங்கிப் பார்க்கிறேன் அவள் வருவாளா?
அவள்  பிழைத்துக்கொண்டாள்! என் கேள்விகளே தினந்தோறும் செத்துக்கொண்டே இருக்கிறது!


கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...