புதன், 29 ஏப்ரல், 2020

விக்ருதி மலையாள திரைப்பட விமர்சனம்

என்னைக் கவர்ந்த சினிமா
சமூகத்தில் சமூக ஊடகங்களின் மோசமான விளைவுகளைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் வந்திருந்தாளும், மலையாளத்தில் 2019 ல் வெளிவந்த Vikruthi என் மனதை மிகவும் கவர்ந்த படம்.

அப்படத்தின் இயக்குநர் திரு.ஜோசப் அவர்கள் சமூக ஊடக இயக்கவியலால் பொதுவாக இயக்கப்படும் பார்வையாளர்களுக்கு ஒரு சரியான நேரத்தில், சரியான செய்தியை நுட்பமாகத் தெரிவிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது - சமீர் (சவுபின் ஷாஹிர்) மற்றும் எல்டோ (சூரஜ் வெஞ்சாரம்மூடு). இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சித்தரிப்பதன் மூலம் படம் தொடங்குகிறது.
எல்டோவுக்கும்,அவர் மனைவி சுராபி லட்சுமிக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளது. இருவருக்கும் அழகான ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிகவும் எளிமையான குடும்பம்.
சமீர் அரபு நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர், சமூக ஊடகங்கள் மூலம் தனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதில் மிகவும் பிடிக்கும் அவருக்கு...!
அந்நிய தேசத்தில் தன் இளமையைத் துளைத்துவிட்டு காலம் கடந்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது....! அதற்கிடையில் அவர் ஒருநாள் விளையாட்டாகக் கொச்சி மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்த எல்டோவின் படத்தைக் கிளிக் செய்து நண்பர்களுக்கு பகிர்வார்....! அந்தப் படம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நெட்டிசன்களிடையே பரப்பப்பட்டபோது இந்த சம்பவம் ஒரு மாறுபட்ட திருப்பத்தை ஏற்படுத்துகிறது....!
இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியமான படம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படம், காணொளிகளைப் பகிர்ந்து அதன் மூலம் அற்ப லைக் கிடைப்பதைக் கண்டு அகம் மலரும் நபர்களுக்கு, அந்தப் புகைப்படத்தினால் ஒரு குடும்பமே பாதிக்கப்படுகிறது என்பதை உணர்வதில்லை. உணராத நபர்களுக்கு இப்படம் அர்ப்பணம்

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...