புதன், 29 ஏப்ரல், 2020

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பதிப்பு 5.25 மலையாள திரைப்பட விமர்சனம்

என்னைக் கவர்ந்த மலையாள திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பதிப்பு 5.25
எழுத்தும் இயக்கமும் ; ரித்தீஷ் பாலகிருஷ்ணன் பொட்டல்
நடிகர்கள்: சூரஜ் வெஞ்சராமுடு, மற்றும் சுபின் சவுபின் ஷாஹிர் இருவரின் நடிப்பில் மீண்டும் ஒரு சிறந்த படம்.

வயதான தந்தையை கவனித்துக்கொள்ள முடியாமல் போராடும் மகனின் பாசப் போராட்டமே இப்படத்தின் கதை. இப்படத்தின் கதை ஒரே வரியில் சுருக்கமாக விவரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் படத்தின் கதையை காட்சிப்படுத்துவதில், உணர்ச்சிகளுடன் கருப்பொருள்களை விரிவாக விவரிக்கிறார் இயக்குநர்...!
பாஸ்கரன் (சூரஜ் வெஞ்சரம்மூட்) மூர்க்க குணம் கொண்ட வயதான முதியவர், இவரால் எல்லோரோடும் இணைந்து இயல்பாக வாழமுடியாத பழைமைவாதி, கடந்த காலத்தின் ஒட்டுமொத்த உருவமென்றே சொல்லலாம்! பொறியியல் பட்டப்படிப்பு படிக்கவைத்தும் ஊருக்கு வெளியே வேலை செய்யக்கூட அனுமதிக்கப்படுவதில்லை....!
இதனால் மகனுக்கு கிடைத்த பல நல்ல வேலை வாய்ப்புகள்பறிபோனது!கல்யாண வயதைக் கடந்து போனதால் ஊர் மக்கள் மற்றும் நண்பர்களாலும் கேலிக்குள்ளாக்கப்டும்போது சுப்ரமணியனுக்கு ரஷ்யாவில் பணிபுரிய ஒரு நல்லவேலை வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தனது தந்தையை நண்பர் உதவியுடன் செவிலியரின் கைகளில் விட்டு விட்டு தனக்கான வாழ்வை வாழ ரஷ்யா சென்றுவிட்டார்......! .
அப்பாவிற்கு பணிவிடை செய்ய எத்தனையோ பணிப்பெண்களை வைத்தும் சரிப்பட்டு வராததால் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து ஆண்டு விடுமுறைக்கு தாயகம் வரும்போது, தனது தந்தைக்கு ஒரு ரோபோவைக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்து இனிமேல் இந்த ரோபோதான் உங்களுக்கு எல்லாப் பணிவிடையும் செய்யுமெனச் சொல்ல.....!
டே..! எதைச் செய்தாலும் ஆழ்மனதிலிருந்து அன்போடு செய்யவேண்டும், கடைமைக்கு செய்யாதே! என்று சொல்ல அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மனப் போராட்டம் தொடர்கிறது.....!
எந்த நவீனத்தையும் ஏற்காதா தந்தை கொஞ்சம், கொஞ்சமாக ரோபோவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள சில சூழ்நிலைகள் அமைய! நல்ல நகைச்சுவையுடன் காட்சிகளுடன் கதை நகர்கிறது...!
உள்ளூர்வாசிகள் அன்பாக ரோபோவுக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள் - குஞ்சப்பன் ..! குஞ்சப்பனின் வருகை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
சூரஜ் வெஞ்சராமுடு நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிக கச்சிதமாக இருந்தது, மலையாளத்தில் திலகனைத் தவிர வேறு யாரையும் அந்த காதா கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாது.
தமிழில் இந்திரன் 2 வை நினைவு படுத்தினாலும் இது முற்றிலும் வேறுபட்ட கதைக்கருவுடன் கூடிய மலையாளிகளுக்குண்டான நகைச்சுவை நிறைந்த தந்தைமகனுக்குண்டான பாசப் போராட்டம் .

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...