புதன், 29 ஏப்ரல், 2020

அஞ்சாம் பாதிரா மலையாள திரைப்பட விமர்சனம்


நான் பார்த்து ரசித்த மலையாள திரைப்படம் அஞ்சாம் பாதிரா
எழுத்தும் இயக்கமும்; மிதுன பனுவல் தாமஸ்
நடிகர்: குஞ்சாக்கோ போபன் , நாம்யா நம்பீசன்,உண்ணிமய பிரசாத், மற்றும் பலர்.
கதை சுருக்கம்.
காவல் அதிகாரி ஒருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு மறுநாள் காலையில் கொலையாகிக் கிடக்கிறார்...!
உயிரோடு கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, இதயம் குடைந்து எடுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது....! ஆனால் கொலையாளி பற்றி சிறு தடயம் கூட கிடைக்கவில்லை.
இந்தக் கொலையை விசாரிக்கும் உயர் காவல் அதிகாரியின் நெருங்கிய நண்பர் குஞ்சாக்கோ போபன் ஒரு மனோதத்துவ பேராசிரியர். காவல்துறை விசாரணைக் கைதிகளை மனோதத்துவ முறையில் விசாரணை செய்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் அவருக்கு, ஒரு டிகிரி முடித்தால் கொச்சி மனோதத்துவக் கல்லூரியில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் தற்காலிக பேராசிரியர் வேலை நிரந்தரமாகும் என்ற நிலையில் காவல்துறைக்கு உதவியாக இருக்கிறார்.
எப்பவும் குற்றவாளிகளின் மனநிலையை உற்று நோக்கும் குஞ்சா போபன் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு, இதேபோல் மீண்டும் ஒரு கொலை நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை காவல் அதிகாரிக்குத் தெரிவிக்கிறார் ...! இதைக் கேட்ட காவல் உயர் அதிகாரி அலட்சியமாக நடந்துகொள்ள....! அவர் சொன்ன மாதிரியே அத்தநாள் ஒரு காவல்துறை அதிகாரி அதே பாணியில் கடத்தப்பட்டு, கண்கள், இதயம் குடையப்பட்டு பிணமாக ஏஎஸ்பி அலுவலகத்தில்
கிடக்க காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியாகிறது...!
இப்போது பிணத்தின் அருகே, கண்கள் திறந்திருக்கும் நிலையில் செய்யப்பட்ட ஒரு நீதி தேவதையின் சிலை. ஆனால் கொலையாளி பற்றிய தடயம் எது கிடைக்கவில்லை, இப்படியே மூன்று கொலைகள் நடக்கிறது...!
மூன்று கொலைகளுக்கும் சிறு தடயம் கூட கிடைக்காத குஞ்சா போபவனுக்கு நான்காவது கொலையில் சிறு தடையம் கிடைக்கிறது....! அதன்மூலம் கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே கதையின் விறுவிறுப்பு.
படத்தில் யார் கொலை செய்கிறார்கள்...? எதற்காக என்ற கேள்விகளை நம்மிடையே எழுப்பி விட்டு, படம் முடியும் வரை நம்மை பரபரப்பிலேயே வைத்திருக்கிறது திரைக்கதை. இந்த மாதிரிப் படங்களில் தொடர் கொலையாளிமேல் ஒரு பரிதாபம் வர வைக்கும் ஒரு கிளைக்கதையும் இருக்கிறது.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம்
ஸ்லோவாகதான் நகர்கிறது. மலையாளப் படங்களில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பவற்றில் முக்கியமாக இருப்பது அந்த நிலப்பரப்பும், கதையில் இருக்கும் யதார்த்தமும்தான்.
படம் தொடக்கமுதல் கடைசிவரை எந்த ஒரு ஆரவாரமின்றி கதையின் தேவைக்கேற்ப விறுவிறுப்புடன் நகர்கிறது. தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனைப் பற்றிய திரில்லர் படமாக உருவாக்கியிருப்பதால் பார்வையாளரைப் பெரிதும் கவர்கிறது.
படம் பார்த்து முடிக்கையில் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்ததுபோல் இருந்தது.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...