புதன், 29 ஏப்ரல், 2020

டிரான்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

நான் பார்த்து ரசித்த மலையாள திரைப்படம் டிரான்ஸ் (Trance )
எழுத்து, இயக்கம்,தயாரிப்பு: அன்வர் ரஷீத்
நடிகர்கள் : ஃபஹத் பாசில், நஸ்ரியா நாஜிம், கவுதம் வாசுதேவ் மேனன், சௌபின் ஷாஹிர், விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் பொதான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதை விமர்சனத்திற்கு முன்பாக நான் ஒன்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன் ...எல்லா மதங்களும் நம்பிக்கை என்ற ஒற்ற நூலில்தான் இணைந்துள்ளது...! ஒருவரின் நம்பிக்கையை சிதைக்க யாருக்கும் அனுமதியில்லை என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்! கடவுள் இருக்கிறது என்பதும் இல்லையென்பதும் அவர், அவர் நம்பிக்கையே.
மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தை,கூத்தை, இதுவரை வேறு எந்த மொழியிலும் சொல்லாத விதத்தில் சொல்லியிருப்பது பாராட்டக்குடியது.
கதை விமர்சனம்.
சிறுவயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியுடன் மிகப்பெரிய மோட்டிவேஷனல் பேச்சாளராக வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளுக்கிடையில் வாழ்க்கை கடக்கும் விசுபிரகாஷ் ( ஃபகத் ஃபாசில் )
மனநலம் பாதித்த தம்பியும் தற்கொலை செய்துகொள்ள, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துக்கத்திலும் தூக்கமின்றியும் வாடும் விசுபிரகாஷ் மும்பைக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் எனச் செல்கிறார்...!
தொழில் ரீதியாக அறிமுகமான ஒரு பெண் மூலம் கௌதம் மேனன், செம்பன் ஜோஸ் ஆகியோரை சந்திக்கிறார்.....! வாழ்க்கையில் தான் எதிர்பார்த்த நல்லதொரு எதிர்காலம் தொடரப்போகிறது...! என்ற நம்பிக்கையில் சென்ற அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது...! மத போதகர்கள் கட்டுக்குள் சிக்கி மாய்வதை விவரிக்கிறது....!
கிறிஸ்தவ மதத்தில் உள்ள சில போலி மத போதகர்கள் செய்யும் கூத்தை நேரடியாக விமர்சிக்கிறது கதைக்களம்....!
ஃபஹத் பாசில் ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களாலும் அதற்கு அவர் கொடுக்கும் நியாயமான நேர்த்தியான நடிப்பினாலும் உயர்ந்துகொண்டே போகிறார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை இசையுடன் சேர்ந்த காட்சியைப் பார்க்கும் நம்மை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டுசெல்கிறது....! அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களில் பார்ப்பவர்களின் மன ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும் வகையிலும், குழப்பம், ஆர்வம் எனப் பல இடங்களில் உணர்ச்சி வசப்படும்படி நம்மை ஆட்கொள்ளும் வகையிலும் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் இயக்குநர் அன்வர் ரஷீத் பாராட்டப்படவேண்டியவர் இந்தப் படத்தில் மதத்தை ஒரு போதைப்பொருளாக ஒரு கூட்டம் பயன்படுத்தி மக்களுக்கு அதைப் பழக்கப்படுத்தி காசு பார்க்கிறார்கள் என்பதை தைரியமாகச் சொல்கிறது. படத்தின் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...