புதன், 29 ஏப்ரல், 2020

கேம் ஓவர் ( GAME OVER ) மலையாள திரைப்பட விமர்சனம்



நான் பார்த்து ரசித்த தமிழ் சினிமா கேம் ஓவர்
( GAME OVER )
திரைக்கதை இயக்கம்: அஷ்வின் சரவணன்.
நடிகர்கள் : டாப்ஸி, வினோதினி, அனிஷ் குருவில்லா, ரம்யா
நான் பார்த்த பேய் படங்களில் இப்படம் கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையாக இருந்தது.
பொதுவாக பெண்கள் தங்களுக்கு நடந்த, கொடுமைகளை நினைத்து துவண்டு போகாமல், வாழ்வோ! சாவோ! எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாகப் போராடவேண்டும் என்ற தன்னம்பிக்கையை அழுத்தமாகவே சொல்கிறது.
திரைக்கதை
சென்னையில் தனியாக இருக்கும் ஒரு பெண் தலை வெட்டப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, ஒரு வருடம் ஆகியும் அந்த கொலையாளிகளை காவல்துறை பிடிக்காமல் இருக்கிறது.
காணொளி கேம் தயாரிப்பு நிபுணரான டாப்ஸி, பெற்றோர்களுடன் எதோ ஒரு மனக்கசப்புடன் வீட்டை விட்டு வெளியேறி, பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார்...!
அவருக்கு உறுதுணையாக வீட்டு வேலை செய்யும் வினோதினியும், ஒரு காவலாளி என மூன்று பேர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா இருந்தும் அவர்களைப் பிரிந்து தனிமையில் வாழும் டாப்ஸி, திடீரென்று இருட்டைப் பார்த்து பயப்படுவதோடு, அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார்....!
அவருக்கு புத்தாண்டு தினத்தில் நேர்ந்த கசப்பான சம்பவத்தை நினைத்து பயப்படுவதோடு, தற்கொலையும் செய்துகொள்ள முயற்சிக்கிறார்.....! அதே சமயம், அவரது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவின் மூலம் அவர் உயிர் பிழைப்பதோடு, அந்த டாட்டூ எதையோ அவருக்கு உணர்த்த முயற்சிக்கிறது....! இதனால் குழப்பமடையும் டாப்ஸி, மர்ம மனிதன் அவரை கொடூரமாகக் கொலை செய்வது போல கனவு காண்கிறார்...!
மர்ம மனிதர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் பெண்களில் ஒருவரது ஆன்மா, டாப்ஸியும் அதே மர்ம மனிதர்களால் கொலை செய்யப்படப் போவதை அவருக்கு உணர்த்துகிறது! அதை உணராத டாப்ஸி, தனக்கு மன ரீதியாகப் பிரச்சினை இருப்பதாக நினைத்து வருத்தமடைவதோடு, தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை நினைத்து வருந்துகிறார்....!
ஒரு கட்டத்தில் அவருடன் இருக்கும் அந்த ஆன்மா மூலம் அனைத்தையும் புரிந்துகொள்வார் ..!
தனக்கு வரும் ஆபத்தை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார், என்பது தான் இப்படத்தின் நேரடி கதை. ஆனால், இதை இப்படி நேரடியாகச் சொல்லாமல், அனைத்து விஷயங்களையும் மறைமுகமாகச் சொல்லி, திரைக்கதையை வித்தியாசமான முறையில் நகர்த்திச் சென்றிருக்கும் இப்படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...