திங்கள், 29 ஜூலை, 2024

வாத்தியார் புத்தக விமர்சனம்

 நேற்று (27-07- 2024)அண்ணன் நித்யா குமார் (பரிவை சே. குமார் ) அவர்கள் எழுதிய ‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்பின் விமர்சனங்கள் மற்றும் திப்பு ரஹீம் எழுதிய ‘மூக்குக் கண்ணாடி’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா இவ்விரண்டு நிகழ்வுகளையும் Galaxy Books வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குழுமம் சார்பாக Proactive Excel Safety Consultancy அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகள் இருக்கிறது, அத்தனை கதைகளும் எனக்குப் பிடித்த கதைகள் என்றாலும், நான் ‘மண்புழு’ என்ற கதையை எடுத்துப் பேச வேண்டும் என்று விரும்பினேன். ஏன் என்றால், இவ்வுலகில் இளமையை வாரி அணைத்துக்கொள்ள ஏராளமானவர்கள் இருகரம் ஏந்தி தவிக்கிறார்கள். ஆனால் முதுமையை கைகொடுத்து தூக்கிவிடவோ, அல்லது கைத்தடி எடுத்துக்கொடுக்கவோ பெரும்பாலங்வார்கள் முன்வராதது வேதனைக்குரியது.

பிள்ளைகளுக்கா உழைத்து, உழைத்து முற்றிப் பழுத்துக் கிடக்கும் முதுமையையின் வித்துக்களைப் பிடுங்கி விட்டு சக்கையாக தூக்கிப்போடும் பெரும்பாலான பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன். அதன் தாக்கம் எப்போதும் என் நெஞ்சிற்குள் தீப் பிழம்பாய் எறிந்து கொண்டிருக்கிறது. 

பிள்ளைகள் பொருளாதார தேவைக்காக பெற்றோர்களை கிராமத்தில் விட்டு விட்டு மணிப்பிளான்ட் செடிகளைப் போல் நகரங்களில் ஏதாவதொரு நாலு சுவர்களைப்பற்றி வாழ்த்துவிடுகிறார்கள். ஆனால் நம் பெற்றோர்கள் அப்படியல்ல!. கிராமங்களில் ஆலமரம் போல் விழுதூன்றி மண்ணில் கிளைகளைப் பரப்பி  வாழ்பவர்கள். ஆலமரத்தின் ஆணிவேர் முறித்து அடியோடு பெயர்த்து நடுவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! அது ஆரோக்கியமானதும் கூட அல்ல! 

அண்ணா குமார் அவர்களின் எல்லாக் கதைகளும் குடும்ப உறவுகளின் மனச் சிக்கல்களை மண் மனம் மாறாமல் ஒரு நேர்த்தியான மீனவனின் வலைப்பின்னல்களைப் போல பின்னப்படுவது மிகச் சிற்பு. கிராமத்து வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காதவர்களுக்கு வாசிக்கத் தெரியாதவர்கள் கையிலிருக்கும் புல்லாங்குழல்களைப் போன்றது! எல்லா ஓட்டைகளிலும் ஒரே மாதிரித்தான் காற்றுவரும்.

ஏழு சுரங்களுக்குள் எல்லா உணர்வுகளையும் மொத்தமாக கடத்ததும் வித்தைகார ராஜாவைப் போன்று கிராம மக்கள் மனங்களின் உணர்வுகளை தான் எழுத்துகளால் வாசகர்களின் மனங்களுக்கு கடத்தத் தெரிந்த எங்கள் ராஜாவாகவே இருக்கிறார், நாங்கள் அருள்மொழியின் குழலிசையில் மயங்கிக் கிடப்பது போல் அண்ணன் பரிவை சே. குமார் அவர்களின் கதைகளில் மயக்கிக் கிடக்கிறோம். வாழ்த்துக்கள் நித்யா குமார் 🙏

புத்தகம் வேண்டுவோர் Galaxy Books பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம். விலை 180/-

கருத்துகள் இல்லை:

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...